Monday 2 December 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவோம் : விஜயகாந்த் வலியுறுத்தல்


மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் டிசம்பர் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உடல் உறுப்புகளில் குறைபாடுகள் கொண்டு வாழ்ந்து வருகின்ற மாற்றுத் திறனாளிகள் மீது அக்கறை செலுத்தி, அவர்கள் அனைவரும் நம்மில் ஒருவராகத்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காகத்தான் உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் அவர்களின் துன்பங்கள் நீங்கி எல்லா வளமும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும் அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அரசியல் இயக்கங்களிலே தேமுதிகவில் மட்டும்தான் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி அமைப்பை உருவாக்கி, அவர்களும் அரசியலில் சம உரிமை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சமுதாயத்தில் உள்ள நாம் அனைவரும் நம்முடைய சக்திக்கேற்றவாறு உதவி செய்வதை நம்முடைய இலட்சியமாக கொள்ள வேண்டும். இந்த உணர்வினை பொதுமக்கள் அனைவருக்கும் உண்டாக்குவதே இந்த உன்னத நாளின் குறிக்கோள் ஆகும். ஆகவே மாற்றுத் திறனாளிகளும் நம்மைப் போலவே வாழ்வதற்கு உரிய சூழ்நிலையை உருவாக்குவோம் என்ற சூளுரையோடு எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை இந்த நன்னாளில் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார்.

Friday 29 November 2013

மின் உற்பத்தி: காங்கிரஸ் - திமுக கூட்டுச் சதி என்பதை நிரூபிக்க முடியுமா?


"மின் உற்பத்தியைக் குறைக்க காங்கிரஸ் - திமுக கைகோர்த்து கூட்டுச் சதி செய்கிறது' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதை, "அவரால் நிரூபிக்க முடியுமா?' என்று திமுக தலைவர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது மின்வெட்டுப் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில்தான் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன என்று முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். இது சதி என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு முதல்வராக இருப்பவர் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்.
மின் உற்பத்தியை எந்த அரசும் சதி செய்து குறைக்க முன் வராது. அதற்கு யாரும் துணை போக மாட்டார்கள்.
மின் உற்பத்தியைக் குறைக்கக் கூறி, மத்திய அரசிடம் யாராவது கேட்க முடியுமா?
மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் ஆண்டுதோறும் மின் தேவை குறைவாக உள்ள மழைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளால்தான் மின் உற்பத்தி குறையும்.
இந்தப் பராமரிப்பு பணி என்பதும் திடீரென செய்யப்படுவதில்லை.
ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 20 நாள்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காகவே மின் உற்பத்தி நிறுத்தப்படும்.
நிலக்கரி தட்டுப்பாடு: மின்சாரம் தயாரிக்கத் தேவையான நிலக்கரி மற்றும் நாப்தா ஆகியவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும். தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வடசென்னை, மேட்டூர் மின் நிலையங்களுக்கு 90 லட்சம் டன் நிலக்கரி தேவை. மத்திய அரசு 37 லட்சம் நிலக்கரிதான் வழங்க வாக்குறுதி அளித்துள்ளது.
தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை வடஇந்தியாவில் உள்ள இரண்டு சுரங்கங்களில் வெட்டி எடுத்துக்கொள்ள மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சத்தீஸ்கரில் சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் ஒடிசா மாநிலத்தில் மந்தாகிணி சுரங்கப் பணியின் முன்னேற்றத்தில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டவில்லை. அதனால்தான் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.
நிரூபிக்கத் தயாரா? மின் உற்பத்தியில் காங்கிரஸ் - திமுக கைகோர்த்து தமிழக மக்களைப் பழிவாங்குவதாக பெரிய குற்றச்சாட்டை முதல்வர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சவால் விட்டுக் கேட்கிறேன்.
மின் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றி நானோ (கருணாநிதி) திமுகவினரோ மத்திய அரசில் உள்ளவர்களிடம், மத்திய அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்களிடமோ பேசியதாக ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா? அதற்கு அவர் தயார்தானா என்று கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

Thursday 28 November 2013

மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி


தமிழகத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழ்நாட்டில்  அண்மையில் பெய்த மழையின் காரணமாக,  31.10.2013 அன்று  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த  சுந்தரம் மகன் சக்திவேல், மின்சாரம் தாக்கியதில்  உயிரிழந்தார்.
1.11.2013 அன்று மதுரையைச் சேர்ந்த சங்கையா மனைவி தில்லையம்மாள்; 4.11.2013 அன்று விழுப்புரம் மாவட்டம், நவமால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன் மகன் நாகேஸ்வரன்;  நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்கரபாணி மனைவி பானுமதி; திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியக்காள்; அதே மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மகன் பெரியண்ணன் - ஆகியோர்  இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். 
10.11.2013 அன்று கடலூர் மாவட்டம், சான்றோர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த  கோவிந்தராஜ் மனைவி சாந்தி; 16.11.2013  அன்று  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜி என்கிற விஜியா சாமுண்டீஸ்வரி; விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சுனன்   மனைவி அய்யம்மாள் ஆகியோர்  வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
16.11.2013 அன்று  விழுப்புரம் மாவட்டம்,  திண்டிவனம் வட்டம், மரக்காணம் கிராமத்தைச் சேர்ந்த அரிராமர் மகன் சதீஷ்குமார் என்கிற ஏழுமலை மீது  மரம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Readmore:www.dinamani.com

Wednesday 27 November 2013

ஆர்யா, சந்தானத்துடன் இணையும் ராஜேஷ்


இயக்குனர் ராஜேஷ் - நடிகர் ஆர்யா கூட்டணி மீண்டும் இணைகிறது.
‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இயக்குனர், அடுத்தும் மாபெரும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜேஷ் இயக்கிய ‘அழகுராஜா’ திரைப்படம் மோசமான தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வி இயக்குனர் ராஜேஷை ரொம்பவே பாதித்து விட்டதாகத் தெரிகிறது.
அதனால், ராஜேஷ், தனது அடுத்த படத்தை மீண்டும் பழையபடியே வெற்றிப்படமாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிட்டார். டைரக்டர் ராஜேஷ். எம், ஆர்யா, நயன்தாரா, சந்தானம் கூட்டணியில் வந்த பாஸ் என்கிற பாஸ்கரன் செம ஹிட் படம். இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
ராஜேஷின் ஆஸ்தான நகைச்சுவை நடிகர் சந்தானமும் ஆர்யா நடிக்கும் படத்தில் இருக்கிறாராம். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இந்தப் படத்தில் ஆர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல், தனது 'தி ஷோ பீப்புள்' (The Show People) நிறுவனம் மூலம் படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

Readmore:www.dinamani.com

Monday 25 November 2013

மின் தட்டுப்பாடு : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தில் திடீரென ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழகத்தில் நவம்பர் மாதம் எதிர்பாராத மற்றும் திடீரென ஏற்பட்ட மின் தட்டுப்பாடு குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
2011ஆம் ஆண்டு நான் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் சுமார் 4000 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது, தமிழகத்துக்கு வரும் மின் பரிமாற்றத் தடங்களை அதிகரித்து, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற வழி செய்யுமாறு உங்களுக்கு கோரிக்கை வைத்தேன். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. எனினும், தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, மின் தட்டுப்பாட்டை குறைத்து வந்தது.
நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லாத நிலை இருந்தது. இதனால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தன.
ஆனால், திடீரென தமிழகத்தில் மின் நிலைமை மோசமடைந்தது. மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்தது. சில மின் உற்பத்தி அலகுகளில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடை பட்டது. சென்னை மின் உற்பத்தில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதுபோன்று ஒரே நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவங்களால், தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை எற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனை தவிர்க்க, தமிழக மக்களின் நலனுக்காக, தமிழகத்தில் உள்ள மத்திய நிறுவனங்களின் கீழ் வரும் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியை அதிகரித்து, தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க உதவிடுமாறு உத்தரவிட வேண்டுகிறேன்.  இந்த பிரச்னையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தால், தமிழகம் இருளில் மூழ்கும் அபாயத்தில் இருந்து காக்கலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
Readmore:www.dinamani.com

திருச்சியில் வழக்குரைஞர்கள் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு

First Published : 25 November 2013 12:48 PM IST
திருச்சியில் வழக்குரைஞர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். திருச்சி நீதிமன்றத்தின் முன்பு 300க்கும் மேற்பட்டோர் மேற்கொண்ட இந்த சாலைமறியலால் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் சுமார் 45 நிமிடங்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழக்குரைஞர்கள் ஆரோக்கியதாஸ், பொன்முருகன், செல்லத்துரை இவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த சாலைமறியல் நடைபெற்றது.
அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் உரிய தீர்வு காணப்படும் என்றும் கூறப்பட்டதை அடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

Readmore:www.dinamani.com

Friday 22 November 2013

ஏற்காடு இடைத்தேர்தல்: நவம்பர் 28-இல் முதல்வர் பிரசாரம்


இடைத்தேர்தல் நடைபெறும் ஏற்காடு தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 28-ஆம் தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.
ஏற்காடு தொகுதியில் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு  அதிமுக வேட்பாளர் பி.சரோஜா உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக இடையே நேரடியான போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு பெரிய கட்சிகளைத் தவிர இங்கு போட்டியிடும் 9 வேட்பாளர்களும் சுயேச்சைகள்.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் ஏற்கெனவே தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பயண விவரத்தை அதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அதன் விவரம்:
1. மின்னாம்பள்ளி - பேசும் இடம் (வழி: காரிப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம்.பெருமாபாளையம், டோல்கேட்)
2. வெள்ளாளகுண்டம் பிரிவு - பேசும் இடம் (வழி: காட்டுவேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, வாழப்பாடி பிரிவு)
3. வாழப்பாடி பஸ் நிலையம் - பேசும் இடம் (வழி: பேளூர் சாலைப் பிரிவு, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி)
4. பேளூர் - கருமந்துறை பிரிவு சாலை, எம்.ஜி.ஆர்.சிலை அருகில் - பேசும் இடம் (வழி: பள்ளத் தாதனூர், நடுப்பட்டி)
5. நீர்முள்ளிக்குட்டை - பேசும் இடம் (வழி: ராஜாபட்டினம், பூசாரிப்பட்டி, அனுப்பூர் பிரிவு)
6. கூட்டாத்துப்பட்டி - பேசும் இடம் (வழி: சர்க்கார் நாட்டார் மங்கலம், ஏ.என்.மங்கலம், செல்லியம்பாளையம், குள்ளம்பட்டி பிரிவு)
7. வலசையூர் - பேசும் இடம் (வழி: ராமர் கோயில்)
8. அயோத்தியாப்பட்டினம் - பேசும் இடம்
9. உடையாப்பட்டி - பேசும் இடம்

Readmore:www.dinamani.com